அம்பாறையில் 33 மாணவர்கள் கௌரவிப்பு.

24.11.2012அன்று அம்பாறை மாவட்டத்தில் நேசம் கல்விதிட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கபட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 33 மாணவர்களுக்கான கௌரவிப்பு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட பதில் கல்வி இணைப்பாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக பிரதி கோட்டகல்விப்பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் , பாடசாலை அதிபர்கள் , பிரதேச சபை தவிசாளர் திரு V. புவிதராஜன் கிராமசேவகர் திரு S.பார்த்தீபன் உட்பட brightfuture nesakkaram இணைப்பாளர் திரு.ஜெனனன், கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 30th, 2012, Comments Off on அம்பாறையில் 33 மாணவர்கள் கௌரவிப்பு. | nesakkaram

சித்தாண்டி வந்தாறுமூலை 21 மாணவர்கள் கௌரவிப்பு

நேசக்கரம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை , குமாரவேலியர்கிராமம் , பூலாக்காடு , கிரான், மாவடிவேம்பு , கதிரவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 21மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 22.11.2012 அன்று சித்தாண்டி வந்தாறுமூலை மகாவித்தியாலத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாடசாலை அதிபர் திரு.எஸ்.பஞ்சலிங்கம் , பிரதி அதிபர் திருநாவுக்கரசு , கிராமியசங்கச்செயலாளர் யோகநாயகி , நேசக்கரம் வந்தாறுமூலை இணைப்பாளர் வினாயகமூர்த்தி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து மாணவர்களுக்கான நினைவுப்பரிசினை வழங்கிக் கௌரவித்தனர்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 30th, 2012, Comments Off on சித்தாண்டி வந்தாறுமூலை 21 மாணவர்கள் கௌரவிப்பு | nesakkaram

“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.

“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.

நேசக்கரம் முன்னெடுக்கும் திட்டங்களில் எமது மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் வகையிலான திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். தற்போது கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் கிழக்குமாகாணத்தில் 8ஆயிரம் மாணவர்களுக்கானதும் வடமராட்சி கிழக்கில் 150 வரையான மாணவர்களுக்குமான முன்னோடி பயிற்சிகளை நடாத்திக் கொண்டிக்கிறோம். ஓவ்வொரு பாடங்களுக்குமான வினாவிடை மற்றும் இலகுவான குறிப்புகள் அடங்கிய பிரதிகளைத் தயாரித்துள்ளோம். அதிகமான இடங்களில் தனியார் கல்விநிலையங்கள் சென்று படிக்க முடியாத அல்லது மின்சார வசதிகள் அற்ற இடங்களைச் சேர்ந்த மாணவர்களை மாலை நேரங்களில் பாடசாலைகளிலும் குறித்த சில … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 18th, 2012, Comments Off on “நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம். | nesakkaram

நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி

நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி

நேசம் கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான கணணி அறிவினை வளப்படுத்தும் நோக்கில் கணணிப்பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இன்று உலகம் கணணிக்குள் இயங்குகிறது எனினும் கணணி அறிவு தாயகத்தில் உள்ள எமது தமிழ் மாணவர்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. தனியார் கணணிப்பயிற்சி வகுப்புகளை நடாத்தும் நிறுவனங்களில் ஏழைமாணவர்களால் கணணிப்பயிற்சியை பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அடிப்படை கணணிக்கற்கையை முடிக்க 20ஆயிரம் ரூபா வரையில் தேவைப்படுகிறது. திறன் மிக்க பிள்ளைகளால் இக்கணணியை தொட்டும் பார்க்க வசதியிருப்பதில்லை. இந்நிலமையை கருத்திற் கொண்டு கணணிக்கற்கை நெறி வகுப்புகளை வசதியற்ற மாணவர்களுக்கு … Read more

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

‘நேசம் கல்வித்திட்டம் 2012’ புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 12.11.2012 அன்று இந்து கலாசார மண்டபம் , நாவற்குடா , மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. திரு. ஆ. ஜனனன் (அமைப்பாளர் – Bright Future – Nesakkaram) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உ. ஜெகதீஸ்வர குருக்கள் (J.P) , அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் அடிகளார் , திரு.கிரிதரன் (பிரதேச செயலாளர் மண்முணை வடக்கு மட்டக்களப்பு) திரு .மு. கமலராஜா (சமுக சேவை உத்தியோகத்தர் மண்முணை வடக்கு) … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 14th, 2012, Comments Off on “நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு | nesakkaram

நவம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை.

கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், November 11th, 2012, Comments Off on நவம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

2012நவம்பர் கணக்கறிக்கை.

2012november

Posted in கணக்கறிக்கைகள், November 10th, 2012, Comments Off on 2012நவம்பர் கணக்கறிக்கை. | nesakkaram

நேசக்கரம் ஒக்ரோபர் 2012 கணக்கறிக்கை.

கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், November 10th, 2012, Comments Off on நேசக்கரம் ஒக்ரோபர் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல்.

எமது இவ்வறிவித்தலை ஊடகங்கள் மக்களைச் சென்றடைய வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கிற முன்னாள் போராளிகள் பற்றி உண்மைக்குப் புறம்பாக அவர்கள் பற்றிய செய்திகளென்று தமிழக வியாபார ஊடகங்களும் பணமே குறியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து எழுதுவதும் பரபரப்பை உண்டு பண்ணவதும் தொடர்கிறது. அண்மையில் ‘நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ” என்றொரு கதையை ஆனந்தவிகடன் ஒரு பெண்ணின் கதையென்று புனைவொன்றை வெளியிட்டிருந்தது. இது மட்டுமன்றி தற்போது கோவில் திருவிழாக்களுக்கும் … Read more

Posted in செய்திகள், November 4th, 2012, Comments Off on அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல். | nesakkaram