நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.

25.05.2013 அன்று  மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :- கடல் மீன்கள் விளையாட்டு கழகம் வாழைச்சேனை விளையாட்டு கழகம் ஆரையம்பதி விளையாட்டு கழகம் கிரான் விளையாட்டு கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் விபுலானந்த விளையாட்டு கழகம் சிவானந்த விளையாட்டு கழகம் நியூ சவுண்ட் விளையாட்டு கழகம் எவக்ரீன் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 31st, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம். | nesakkaram

மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி.

மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 25th, 2013, Comments Off on மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. | nesakkaram

புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள்

புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள்

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளையும் பிரத்தியேக தயார்படுத்தல் வகுப்புகளையும்  நடாத்திவருகிறோம். 3வது வழிகாட்டி கையேடு தயாரிப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 12ஆயிரம் மாணவர்களுக்கான வழிகாட்டி ,விளாத்தாள்கள் அச்சடிப்பதற்கான கடதாசி , மை கொள்வனவு செய்வதற்கு 60ஆயிரம் ரூபா (அண்ணளவாக 375€) தேவைப்படுகிறது. ஆனிமாதம் 10ம் திகதிக்குள் அச்சடித்து வழங்க வேண்டும். ஆவணி மாதம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் இறுதிபரீட்டசையை நடாத்தி முடிக்க கருணையாளர்களின் உதவியினை வேண்டுகிறோம். ‘எழுத்தறிவித்தவன் … Read more

Posted in செய்திகள், May 20th, 2013, Comments Off on புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள் | nesakkaram

புலமைப்பரிசில் மாணவர்களின் கையேடு அச்சகச் செலவு

புலமைப்பரிசில் மாணவர்களின் கையேடு அச்சகச் செலவு

5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு பயிற்சி வினாத்தாழ்கள் அச்சடித்த செலவு விபரம் :- 2ம்மாதம் , 4ம் மாதம் 12ஆயிரம் மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட வழிகாட்டி கையேடு வினாத்தாழ்கள் மொத்தச் செலவு :-142200.00ரூபா. உதவிய உறவுக்கு நன்றிகள். தொடர்பு கொள்ளுங்கள் :- Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், May 20th, 2013, Comments Off on புலமைப்பரிசில் மாணவர்களின் கையேடு அச்சகச் செலவு | nesakkaram

ஏப்றல்மாதம் 2013 கணக்கறிக்கை

april2013  

Posted in கணக்கறிக்கைகள், May 19th, 2013, Comments Off on ஏப்றல்மாதம் 2013 கணக்கறிக்கை | nesakkaram

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 19th, 2013, Comments Off on குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். | nesakkaram

ஊனமுற்ற பிள்ளைகளுக்கான சக்கரநாற்காலி வழங்கல்

ஊனமுற்ற பிள்ளைகளுக்கான சக்கரநாற்காலி வழங்கல்

மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர். இக்குழந்தைகளுக்கான சக்கரநாற்காலிக்காக எம்மிடம் குழந்தைகளின் தகப்பன் விண்ணப்பித்திருந்தார். அவர்களுக்காக பெயர் குறிப்பிடாத உறவு முன்வந்து உதவியிருந்தார். உதவி வழங்கப்பட்டதற்கான படங்கள் : நன்றிக்கடிதம் :- சக்கரநாற்காலி கொள்வனவுச் சிட்டை :- தொடர்பு கொள்ளுங்கள் :- Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 19th, 2013, Comments Off on ஊனமுற்ற பிள்ளைகளுக்கான சக்கரநாற்காலி வழங்கல் | nesakkaram

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தர்சினியின் நன்றி

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தர்சினியின் நன்றி

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தர்சினி தனது பிள்ளைகளின் கல்விக்கும் தனது வாழ்வாதார தேவையை உயர்த்தவும் எம்மிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கான உதவியை பிரித்தானியாவிலிருந்து தனது பெயரைக்குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் முன் வந்து உதவியுள்ளார். தர்சினிக்கு உதவிய உறவுக்கு தர்சினி சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். உதவியைப் பெற்ற தர்சினி எழுதிய நன்றிக்கடிதம்.   தொடர்புபட்ட செய்தி இணைப்பு தொடர்பு கொள்ளுங்கள் :- Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 19th, 2013, Comments Off on தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தர்சினியின் நன்றி | nesakkaram

ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி

ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி

யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய  163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா)  நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 18th, 2013, Comments Off on ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி | nesakkaram

50ஆயிரம் வாழ்வாதார உதவிபெற்ற உறவின் நன்றிக்கடிதம்

50ஆயிரம் வாழ்வாதார உதவிபெற்ற உறவின் நன்றிக்கடிதம்

உதவிய யேர்மனி ஜீவாவுக்கு நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், May 15th, 2013, Comments Off on 50ஆயிரம் வாழ்வாதார உதவிபெற்ற உறவின் நன்றிக்கடிதம் | nesakkaram