நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல்.

நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல்.

மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. 1)    ஜெயராசன் மாலினி 2)    சிவானந்தராசா கென்சிகா 3)    வடிவேல் அருள்வாசகம் 4)    சூசைப்பிள்ளை எட்மன் 5)    பிரான்சிஸ் 6)   செபஸ்ரியன் 7) அந்தோனிப்பிள்ளை 8)   சந்திரகுமார் 9)வீரசிங்கம்                                                                                                                                                                                                                                                  10)    சிவராசா 11)    திருக்கேதீஸ்வரன் ஆகிய 11குடும்பங்களுக்கும் கிராம சேவகர் முன்னிலையில் குடும்பமொன்றுக்கு தலா 15ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. கிடைத்த உதவிகளும் விபரங்களும் … Read more

Posted in உப அமைப்புகள், செய்திகள், June 25th, 2013, Comments Off on நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல். | nesakkaram

மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி  குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், June 23rd, 2013, Comments Off on மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள். | nesakkaram

நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :- 1)    உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது. 2)    ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான … Read more

Posted in உப அமைப்புகள், June 22nd, 2013, Comments Off on நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள். | nesakkaram

நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல்

நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 15th, 2013, Comments Off on நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் | nesakkaram

மேமாதம் 2013 கணக்கறிக்கை

மேமாதம் 2013 கணக்கறிக்கை may2013

Posted in கணக்கறிக்கைகள், June 15th, 2013, Comments Off on மேமாதம் 2013 கணக்கறிக்கை | nesakkaram

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட  ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், June 14th, 2013, Comments Off on புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். | nesakkaram

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உப அமைப்புகள், செய்திகள், June 11th, 2013, Comments Off on ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். | nesakkaram

மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.

மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த … Read more

Posted in செய்திகள், June 11th, 2013, Comments Off on மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். | nesakkaram

தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம்

தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம்

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd  என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் :- 1)    போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2)    சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். 3)    சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல். 4)    கிடைக்கும் வருமானத்தின் மூலம் … Read more

Posted in செய்திகள், June 10th, 2013, Comments Off on தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம் | nesakkaram

நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு

மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியாலயம் கழுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையின் 94வது பாடசாலை தினமும் கண்காட்சியும் மேமாதம் 29.05.2013 தொடக்கம் 3.05.2013 வரையான 3நாட்கள் நடைபெற்றது. கண்காட்சி நிகழ்வுக்கான வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் இறுதித்தருணத்தில் இக்கண்காட்சியினை நடாத்தவதற்கான ஆதரவினை பட்டிருப்பு பாடசாலை அதிபர் எம்மிடம் கோரியிருந்தார். உடனடியான முழுமையான ஆதரவினை எம்மால் வழங்க முடியாமையினால் 3நாட்களும் நடைபெற்ற கண்காட்சிக்கான ஆங்கில பாடத்துக்குரிய பொருட்களை வழங்கியதோடு ஆங்கில சொல்விளையாட்டு பாடத்துக்குரிய பரிசாக 2500பென்சில்களையும் , 50 மாணவர்களுக்குரிய வெற்றிக் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 9th, 2013, Comments Off on நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு | nesakkaram