மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அனைவருக்கும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 31st, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் | nesakkaram

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.

மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த்  ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 29th, 2013, Comments Off on புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு. | nesakkaram

நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல்.

நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல்.

இவ்வருடம் எம்மால் மன்னார் மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான எழுவான் அமைப்பின் மூலம் 13 குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புக்கடன் வழங்கியிருந்தோம். எமது புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவில் கிடைக்கப்பெற்ற 275000.00ரூபா (இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) உதவி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாதாந்த அடிப்படையில் இதுவரையில் எமக்கு 60200.00ரூபா மீளச்செலுத்தியுள்ளனர். மீளச்செலுத்தப்பட்ட பணத்திலிருந்து யூலியஸ் என்பவருக்கு 25ஆயிரம் ரூபா மீன் வியாபாரத்திற்காக வழங்கியுள்ளோம். புதிதாக எம்மிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்ட யூலியஸ் அவர்கள் மாதாந்தம் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 20th, 2013, Comments Off on நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல். | nesakkaram

பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது திட்டத்தில் நாம் முன்னெடுத்த முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் பற்பொடி உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளோம். பற்பொடி உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்வாங்கி இத்தொழிலை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்ட வேலைகளை முடித்துள்ளோம். உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இட ஒழுங்கு அத்தோடு உற்பத்தி செய்யப்படும் பற்பொடியை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான வாகனம் உட்பட மொத்த முதலீட்டுத் தொகை ஒருலட்சத்து … Read more

Posted in செய்திகள், October 19th, 2013, Comments Off on பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை. | nesakkaram

புரட்டாதிமாதம் கணக்கறிக்கை 2013

புரட்டாதிமாதம் கணக்கறிக்கை 2013 PDFவடிவில். september2013

Posted in கணக்கறிக்கைகள், October 15th, 2013, Comments Off on புரட்டாதிமாதம் கணக்கறிக்கை 2013 | nesakkaram

சர்வதேச சிறுவர்தின நிகழ்வு

சர்வதேச சிறுவர்தின நிகழ்வு

சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை  நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான   50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 10th, 2013, Comments Off on சர்வதேச சிறுவர்தின நிகழ்வு | nesakkaram

க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை

எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை  அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 7th, 2013, Comments Off on க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை | nesakkaram

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏற்கனவே இக்கிராமத்தில் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 4th, 2013, Comments Off on மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு. | nesakkaram