மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

தாண்டியடி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை கட்டடச் சுற்று மதில் சுவர்களில் விழிப்பூட்டல் ஓவியங்கள் வரைவதற்கு வர்ணங்கள் தேவைப்படுகிறது. இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் அமையப்பெறும் இவ் ஓவியங்களில் சிறந்த ஓவியங்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதோடு நேசக்கரத்தின் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்துடன் இணைந்து இது போன்ற மாணவர்களுக்கான வழிகாட்டலையும் தொடர்ச்சியாக வழங்கி ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். இவ் ஓவியங்களை வரைவதற்கு தேவையான வர்ணங்கள் தூரிகைகள் கொள்வனவு செய்ய 25ஆயிரம் ரூபா (150€) தேவைப்படுகிறது. இவ்வுதவியை வழங்கி மாணவர்களின் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 25th, 2013, Comments Off on மாணவர்களுக்கான ஓவியப்போட்டி | nesakkaram

போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை.

போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 23rd, 2013, Comments Off on போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. | nesakkaram

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.

இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், December 13th, 2013, Comments Off on தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. | nesakkaram

பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள் தேவை

நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 8th, 2013, Comments Off on பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள் தேவை | nesakkaram

சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி

சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி

தமிழர் பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டவர் சுற்றுலாச் செல்லல் அதிகரித்துவருகிறது. இத்தோடு எயிட்ஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி போரால் பாதிக்கப்பட்டவர்களையும் பொருளாதார வசதியுள்ளவர்கள் தவறாக வழிகளில் பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ள நிலமையில் பல குழந்தைகளை இளம் வயதினைரை எயிட்ஸ் அபாயத்தை எமது தழிழ்ச் சமூகமும் பெற்றுள்ளது. இன்றைய சர்வதேச எயிட்ஸ் தினத்தை விழிப்பூட்டல் நாளாக ஏற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்படி பேரணியை ஒழுங்கமைத்திருந்தது. நேசக்கரம் பிறைட் பூயூச்சர் அமைப்பின் … Read more

Posted in செய்திகள், December 1st, 2013, Comments Off on சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி | nesakkaram