டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.

டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.

19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 30th, 2014, Comments Off on டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. | nesakkaram

தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை.

தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை.

2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள்ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்களில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட வறுமையில் வாழும் குடும்பங்களின் 75 பாலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி எமது முதல் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. | nesakkaram

நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி.

நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி.

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மருத்துவ , இயந்திரபீட மாணவர்களின் நிர்வாக வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பானசர்வதேச  மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் சிறந்த வழிகாட்டலில் 2013 ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் தோற்றிய மாணவர்களிற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான பயிற்சி வகுப்புக்களை ஒரு மாதம் வரையில் 4 நிலையங்களில் நடாத்தியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு , உன்னிச்சை, புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், இலுப்பட்டிசேனை, கரடியனாறு, பன்குடாவெளி, கோரகல்லிமடு, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி. | nesakkaram

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு … Read more

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், January 9th, 2014, Comments Off on நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும். | nesakkaram

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.   குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 8th, 2014, Comments Off on ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி | nesakkaram