சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.

போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 27th, 2014, Comments Off on சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். | nesakkaram

தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி

ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 25th, 2014, Comments Off on தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி | nesakkaram

‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.

‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.

போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது.   இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 18th, 2014, Comments Off on ‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். | nesakkaram

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 11th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு | nesakkaram

கணக்கறிக்கை பெப்ரவரி 2014

கணக்கறிக்கை பெப்ரவரி 2014 PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். feb_2014

Posted in கணக்கறிக்கைகள், March 11th, 2014, Comments Off on கணக்கறிக்கை பெப்ரவரி 2014 | nesakkaram

நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.

நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.

2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள்.   வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், March 4th, 2014, Comments Off on நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். | nesakkaram

சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ?

2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம். 25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி. இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை … Read more

Posted in செய்திகள், March 4th, 2014, Comments Off on சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ? | nesakkaram

34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை.

34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை.

மன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது. மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர். இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 2nd, 2014, Comments Off on 34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை. | nesakkaram

எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி.

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் எம்மர் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கம் ஊடாக 2013ம் ஆண்டு 13குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி 274905,09ரூபா வழங்கியிருந்தோம். கடனுதவியைப் பெற்றவர்கள் கடந்த வருடம் 60200.00ரூபாவும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 30ஆயிரம் ரூபாவுமாக இதுவரையில் 90200.00ரூபாவினை மீளச்செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தம்மால் கடனுதவியை செலுத்த முடியாத நிலமையில் இரு குடும்பங்கள் தொடர்பிலும் இல்லாது விலகிவிட்டார்கள். இவர்கள் தொடர்புக்காக தந்த தொலைபேசியிலக்கம் யாவும் செயலிழந்த நிலமையில் இருக்கிறது. … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 2nd, 2014, Comments Off on எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி. | nesakkaram