வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.

எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 21st, 2014, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். | nesakkaram

மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி

மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 18th, 2014, Comments Off on மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி | nesakkaram

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.

செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 17th, 2014, Comments Off on 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. | nesakkaram

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல்.

போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 15th, 2014, Comments Off on கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். | nesakkaram

முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம்.

முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 100குடும்பங்களுக்கான பழப்பயிர்ச்செய்கைக்கான பழக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளோம். எம்மால் வழங்கப்படும் பழக்கன்றுகளின் பழங்களையும் கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒழுங்கினையும் செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக 3மாதங்களில் பயன்தரும் பப்பாசிகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 3மாதங்களில் பயன்தரத் தொடங்கும் பப்பாசிகள் ஒன்றரை வருடம் தொடக்கம் 2வருடங்கள் வரையில் தொடர்ந்து பயன்தரக்கூடியவை. பப்பாசி விதைகளை பதியமிட்டு 3வாரங்களில் கன்றுகளாக உருவாக்கிக் கொடுக்கக்கூடிய வகையில் நிலம் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 13th, 2014, Comments Off on முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம். | nesakkaram

கணக்கறிக்கை யூன்2014

 யூன்2014 கணக்கறிக்கை PDF வடிவில்.  கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள். june 2014  

Posted in கணக்கறிக்கைகள், July 2nd, 2014, Comments Off on கணக்கறிக்கை யூன்2014 | nesakkaram