பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 30th, 2014, Comments Off on பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள். | nesakkaram

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும்.

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னாரின் 31ம் நாள் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வி திருமதி பாலகௌரி சிவலிங்கம் (டென்மார்க்) குடும்பத்தினர் அன்னதானம் வழங்க முன்வந்து நேசக்கரம் அமைப்பிடம் ஆயிரம் டெனிஸ்குறோணர்களை வழங்கியிருந்தார்கள்.   அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நினைவுநாளன்று மட்டக்களப்பில் நேசக்கரம் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் … Read more

Posted in செய்திகள், October 8th, 2014, Comments Off on அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும். | nesakkaram

‘தேன்சிட்டு இசைவிருது 2014’ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்.

‘தேன்சிட்டு இசைவிருது 2014’ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்.

தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், … Read more

Posted in செய்திகள், October 1st, 2014, Comments Off on ‘தேன்சிட்டு இசைவிருது 2014’ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள். | nesakkaram

‘தேன்சிட்டு இசைவிருது 2014’ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்.

எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது. 02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற … Read more

Posted in செய்திகள், October 1st, 2014, Comments Off on ‘தேன்சிட்டு இசைவிருது 2014’ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள். | nesakkaram

தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டம்.

தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டத்தின் கீழ் 23.09.2014 அன்று தன்னாமுனை கிராமத்தில் வாழும் போசாக்கு குறைந்த குழந்தைகளில் 41 குழந்தைகளுக்கான போசாக்குணவு வழங்கலும் கருத்தரங்கும் நடைபெற்றது. வறுமையும் போரின் தாக்கங்களும் ஆரோக்கியம் குறைந்த குழந்தைகளைக் கொண்ட கிராமங்களின் தேன்சிட்டு உளவள அமைப்பின் பணிகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அம்மக்களின் குறைகள் தேவைகளை கேட்டறிந்து செற்படும் திட்டத்தில் தேன்சிட்டு உளவள அமைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். … Read more

Posted in செய்திகள், October 1st, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டம். | nesakkaram