யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 18th, 2014, Comments Off on யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram

வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு

வன்னியில்  ஓர் தனித்துவ இசைத்தேர்வு

கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை … Read more

Posted in உப அமைப்புகள், செய்திகள், December 14th, 2014, Comments Off on வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு | nesakkaram

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

மீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது. பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள். ஏற்கனவே … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 10th, 2014, Comments Off on பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல் | nesakkaram

நவம்பர் கணக்கறிக்கை 2014

கணக்கறிக்கை நவம்பர் 2014 நவம்பர்2014 கணக்கறிக்கை PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள். november2014

Posted in கணக்கறிக்கைகள், December 10th, 2014, Comments Off on நவம்பர் கணக்கறிக்கை 2014 | nesakkaram